ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய டென்னிஸ் அணியில் மீண்டும் இடம்பிடித்தார் லியாண்டர்!
வரும் ஆகஸ்ட் மாதம் ஜகார்த்தாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணி...


வரும் ஆகஸ்ட் மாதம் ஜகார்த்தாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 18 முதல் செப். 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய ஆடவர் மற்றும் மகளிர் டென்னிஸ் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 27 முதல் தொடங்கவுள்ள யு.எஸ். ஓபன் போட்டியில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி பங்கேற்கவுள்ளார். இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆடவர் அணியில் லியாண்டர் பெயஸ், ராம்குமார் ராமநாதன், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், சுமித் நகல், ரோஹன் போபண்ணா, திவிஜ் ஷரன் ஆகியோரும் இந்திய மகளிர் அணியில் அன்கிதா ரெய்னா, கர்மன் கெளர் தண்டி, ருதுஜா போஸேல், பிரஞ்ஜாலா யத்லபள்ளி, ரியா பாட்டியா, பிரார்த்தனா தோம்பரே ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்திய ஆடவர் அணிக்கு ஜீஸன் அலியும் மகளிர் அணிக்கு அன்கிதா பாம்ப்ரியும் பயிற்சியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
2006-க்குப் பிறகு இப்போதுதான் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் லியாண்டர் பெயஸ் இடம்பெற்றுள்ளார். இப்போட்டியில் அவர் 8 பதக்கங்களை வென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...