இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

துரோணாச்சார்யா விருது: படேலுக்கு வழங்க வலியுறுத்தல்

சமீபத்தில் மறைந்த கூடைப்பந்து பயிற்சியாளர் ராஜேஷ் படேலுக்கு துரோணாச்சார்யா விருது வழங்க வேண்டும் என கூடைப்பந்து வீரர்கள் சங்கம், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன்

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST


சமீபத்தில் மறைந்த கூடைப்பந்து பயிற்சியாளர் ராஜேஷ் படேலுக்கு துரோணாச்சார்யா விருது வழங்க வேண்டும் என கூடைப்பந்து வீரர்கள் சங்கம், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒருங்கிணைந்த கூடைப்பந்து வீரர்கள் சங்கம் (ஐபிபிஏ) என்ற அந்தச் சங்கம், ரத்தோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்காக கடந்த திங்கள்கிழமை ரயிலில் பயணித்தபோது ராஜேஷ் படேல் உயிரிழந்தார். அவரிடம் பயிற்சி பெற்ற பல வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.
ஜூனியர் முதல் சீனியர்களுக்கான போட்டியிலும், ஃபெடரேஷன் கோப்பை, தேசிய விளையாட்டுகளில் சத்தீஸ்கர் அணி கோப்பை வெல்லவும் அவர் உதவியாக இருந்துள்ளார். பழங்குடியின சிறுமிகள் பலர் கூடைப்பந்து வீராங்கனைகளாக உருவாகக் காரணமாக இருந்த ராஜேஷ் படேலுக்கு துரோணாச்சார்யா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.