யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோனி தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய அணி: தீபக் சஹார் அறிமுகம்!

696 நாள்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணி கேப்டனாகச் செயல்படுகிறார் தோனி...

News image
Updated On :25 செப்டம்பர் 2018, 12:22 pm

எழில்

ஆசியக் கோப்பை போட்டியில், சூப்பர் ஃபோர் பிரிவின் கடைசி ஆட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது. இரு வெற்றிகளுடன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. ஆனால், இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவன், புவனேஸ்வர் குமார், பூம்ரா, சாஹல் ஆகிய 5 வீரர்களும் ஓய்வு காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இதையடுத்து கேப்டன் பொறுப்பு தோனி வசம் சென்றுள்ளது. 696 நாள்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணி கேப்டனாகச் செயல்படுகிறார் தோனி. கேப்டனாக விளையாடும் 200-வது ஒருநாள் ஆட்டம் இது. மேலும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், இந்த ஆட்டத்தின் மூலம் ஒருநாள் போட்டிக்கு அறிமுகமாகியுள்ளார். கே.எல். ராகுல், மனிஷ் பாண்டே, தீபக் சஹார், கலீல் அஹமது, சித்தார்த் கெளல் ஆகிய 5 வீரர்களும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.