விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க நினைப்பது முட்டாள்தனமானது என பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் அரையிறுதியுடன் இந்திய அணி வெளியேறியதைத் தொடர்ந்து கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கண்டனக் குரலர்கள் வலுத்து வருகின்றன. இதுதொடர்பாக அக்தர் தனது யூடியூப் சேனலில் பேசியதாவது:
விராட் கோலி, இந்திய அணியின் கேப்டனாக கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். அவரைச் சார்ந்து அணியின் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சரியான தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் ஆகியவற்றின் அவசியம் மட்டுமே தற்போதைக்கு கோலிக்கு தேவை.
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி தொடருவது தான் எதிர்காலத்துக்கு நல்லது. அவரை நீக்க நினைப்பது முட்டாள்தனமானது. ரோஹித் ஷர்மா சிறந்த கேப்டன் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் முயற்சிப்பதும், அதற்கு கோலி தடையாக இருப்பதுமாக வரும் செய்திகள் வெறும் வதந்திகளாகத்தான் இருக்க முடியும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!
வீட்டுக் குறிப்புகள்...

கன்னியாகுமரியில் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டிய விஜய்!

வங்கியில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


