2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்: நல்ல முடிவுக்குக் காத்திருக்கும் கிரிக்கெட் உலகம்!

கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக...
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்: நல்ல முடிவுக்குக் காத்திருக்கும் கிரிக்கெட் உலகம்!

கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக எம்சிசி அமைப்பின் உலக கிரிக்கெட் கமிட்டி தலைவர் மைக் கேட்டிங் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி மனு சாவ்னேவிடம் பேசிவருகிறேன். 2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் கிரிக்கெட்டைச் சேர்ப்பதில் அவர் நம்பிக்கையுடன் உள்ளார். இதன்மூலம் கிரிக்கெட்டுக்கு அதிகப் பலன்கள் கிடைக்கும். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இரு வாரங்கள் ஒலிம்பிக் போட்டிக்காக ஒதுக்குவது சிரமம் இல்லை. நடாவின் கீழ் பிசிசிஐ வந்துள்ளதால் நமக்குச் சாதகமாகவே இருக்கும். அடுத்த 18 மாதங்களில் நல்ல முடிவு கிடைக்கும். அதேபோல 2022 காமன்வெல்த் கேம்ஸ் போட்டியில் மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்படவுள்ளது. 1998-க்குப் பிறகு கிரிக்கெட், காமன்வெல்த் கேம்ஸில் இடம்பெறவுள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com