ஐசிசி தரவரிசை: அதிகப் புள்ளிகளைப் பெற்று ஆஸி. பந்துவீச்சாளர் சாதனை!

லார்ட்ஸ் டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ். 
ஐசிசி தரவரிசை: அதிகப் புள்ளிகளைப் பெற்று ஆஸி. பந்துவீச்சாளர் சாதனை!

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் 2-ஆவது டெஸ்ட் டிராவில் முடிவடைந்துள்ளது. 5 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் முதல் ஆட்டத்தில் ஆஸி. 251 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 258 ரன்களுக்கும், ஆஸி. 250 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின. 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து ஐந்தாவது நாளான ஞாயிற்றுக்கிழமை 71 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.  48 ஓவர்களில் 267 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 47.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிரா ஆனது.

இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ். 

டெஸ்ட் தரவரிசையில் அதிக புள்ளிகளைப் பெற்ற ஆஸி. பந்துவீச்சாளர் என்கிற பெருமை மெக்ராத்துக்கு உண்டு. 2001-ல் அவர் எடுத்த அதே 914 புள்ளிகளைப் பெற்றார். தற்போது அதே 914 புள்ளிகளுடன் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார் பேட் கம்மின்ஸ். பந்துவீச்சாளர்களில் அதிகப் புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தவர், இங்கிலாந்தின் சிட்னி பர்னஸ். 1914-ல் 932 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்தார். இன்று வரை அதை யாராலும் எட்டமுடியவில்லை. 

லார்ட்ஸ் டெஸ்டிலும் அபாரமாக விளையாடிய ஆஸி. பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் பேட்ஸ்மேன்களின் டெஸ்ட் தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் உள்ள விராட் கோலியை விடவும் அவர் 9 புள்ளிகளே பின்தங்கியுள்ளார்.

டெஸ்ட் தவரிசை: பேட்ஸ்மேன்கள்

1. விராட் கோலி - 922 புள்ளிகள்
2. ஸ்டீவ் ஸ்மித் - 913 புள்ளிகள்
3. கேன் வில்லியம்சன் - 887 புள்ளிகள்
4. புஜாரா - 881 புள்ளிகள்
5. ஹென்றி நிகோல்ஸ் - 770 புள்ளிகள்

டெஸ்ட் தரவரிசை: பந்துவீச்சாளர்கள் 

1. பேட் கம்மின்ஸ் - 914 புள்ளிகள்
2. ரபாடா - 851 புள்ளிகள்
3. ஆண்டர்சன் - 823 புள்ளிகள்
4. பிளாண்டர் - 813 புள்ளிகள்
5. ஜடேஜா - 794 புள்ளிகள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com