
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 அணிகளும் ஆடி வருகின்றன. முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 297 ரன்களுக்கும், மே.இ.தீவுகள் 222 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. இதன் தொடர்ச்சியாக இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 343/7 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. ரஹானே 102, விஹாரி 92, கோலி 51 ரன்கள் எடுத்தார்கள். மே.இ. தரப்பில் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
419 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. 50 ரன்கள் எடுப்பதற்குள் 50 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு ரோச்சும் கம்மின்ஸும் 50 ரன்கள் சேர்த்த நிலையில் 26.5 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி, முதல் டெஸ்டை 318 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இரு இன்னிங்ஸிலும் பிரமாதமாக விளையாடிய ரஹானே ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 2-வது டெஸ்ட், வரும் 30 அன்று கிங்ஸ்டனில் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.