காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்த வீரரைத் தேர்வு செய்யவேண்டும்: யுவ்ராஜ் சிங் விருப்பம்!

உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபிறகு இளம் வீரர் ஷுப்மன் கில்லைத் தேர்வு செய்யவேண்டும் என்று யுவ்ராஜ் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 ஜனவரி 2019, 7:11 am

எழில்

உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபிறகு இளம் வீரர் ஷுப்மன் கில்லைத் தேர்வு செய்யவேண்டும் என்று யுவ்ராஜ் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில், இந்த வருட ரஞ்சிப் போட்டியில் அசத்தலாக விளையாடி கவனம் ஈர்த்துள்ளார். இதுவரை 5 ஆட்டங்களில் 720 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் அவரை இந்திய அணிக்குத் தேர்வு செய்யவேண்டும் என்று பலரும் கூறியுள்ளார். யுவ்ராஜ் சிங்கும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஷுப்மன் கில் அருமையான திறமை கொண்டவர். பல நாள்களுக்குப் பிறகு ஓர் இளம் வீரர் விளையாடுவதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன். 2019 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஷுப்மன் கில் இந்திய அணிக்குத் தேர்வாகவேண்டும். ரிஷப் பந்த் போல இளம் வீரர்களை நாம் நன்குக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சிறப்பாக விளையாட நம்பிக்கையளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.