மயங்க் அகர்வால் சதம், ரோஹித் சர்மா 150: அசத்தும் இந்திய தொடக்க வீரர்கள்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் தன்னுடைய முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளார். ரோஹித் சர்மா 150 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்...
மயங்க் அகர்வால் சதம், ரோஹித் சர்மா 150: அசத்தும் இந்திய தொடக்க வீரர்கள்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் தன்னுடைய முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளார். ரோஹித் சர்மா 150 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

மூன்று டி20, 3 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக தென்னாப்பிரிக்கா வந்துள்ளது.  விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்ட் ஆட்டம் புதன்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தோ்வு செய்தாா். இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரா்களாக மயங்க் அகா்வாலும், ரோஹித் சா்மாவும் களம் இறங்கினா். முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் சோ்த்தது. ரோஹித் சா்மா டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி சதம் அடித்தார். ரோஹித் சா்மா 174 பந்துகளில் 115 ரன்களுடனும் (112 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள்), மயங்க் அகா்வால் 183 பந்துகளில் 84 ரன்களுடனும் (11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள்) களத்தில் இருந்தார்கள்.

இன்று காலை மழை எதுவும் இல்லாமல் சரியான நேரத்தில் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரிலேயே பவுண்டரி அடித்து தனது வழக்கமான ஆட்டத்தை மீண்டும் தொடங்கினார் ரோஹித் சர்மா. எனினும் அவர் 125 ரன்களில் இருந்தபோது விக்கெட் கீப்பர் டி காக் எளிதான கேட்சை நழுவவிட்டார். இதன்பிறகு 204 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார் மயங்க் அகர்வால். பிறகு இந்தக் கூட்டணி 250 ரன்களைக் கடந்தது. 

224 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார் ரோஹித் சர்மா. சரியான இடைவெளியில் ரோஹித்தும் மயங்க் அகர்வாலும் பவுண்டரிகள் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தினார்கள். 79.5 ஓவர்களில் இந்தக் கூட்டணி 300 ரன்களைத் தொட்டு சாதனை படைத்தது. மங்கட் - ராய் 413 ரன்களும் சேவாக் - டிராவிட் 410 ரன்களும் எடுத்து அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர்களின் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளார்கள். ரோஹித் - மயங்க் கூட்டணி தற்போது 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com