விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மற்றொரு ஸ்டோக்ஸ் சர்ச்சை: விளக்கம் அளித்த மனைவி!

ஸ்டோக்ஸுக்கும் அவருடைய மனைவி கிளாரேவுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தன் மனைவியை ஸ்டோக்ஸ் அடித்ததாகவும்...

News image
Updated On :9 அக்டோபர் 2019, 6:16 am

எழில்

விருது விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வைத்து பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்டோக்ஸுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்று வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஸ்டோக்ஸின் மனைவி.

கடந்த வாரம் லண்டனில் பிசிஏ விருதுகள் வழங்கும் விழாவில் மனைவியுடன் கலந்துகொண்டார் பென் ஸ்டோக்ஸ். சிறந்த வீரர் என்கிற விருது ஸ்டோக்ஸுக்கு வழங்கப்பட்டது. அந்த விழாவில் ஸ்டோக்ஸுக்கும் அவருடைய மனைவி கிளாரேவுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தன் மனைவியை ஸ்டோக்ஸ் அடித்ததாகவும் கிளாரேவின் தொண்டையில் கையை வைத்து தள்ளியதாகவும் செய்தி ஒன்று வெளியானது. 

செய்தி வெளியான உடனே இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் கிளாரே. இவ்வளவு மோசமான கதை ஒன்று உருவாக்குவார்கள் என்பதை நம்பமுடியவில்லை. ஒருவருக்கொருவர் முகத்தில் கையை வைத்து விளையாடினோம். அப்படித்தான் நாங்கள் அன்பை வெளிப்படுத்திக்கொள்வோம். இதிலிருந்து ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள். இதன்பிறகு மெக்டொனால்ட்ஸில் 20 நிமிடங்கள் செலவழித்தோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.