விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

விஜய் ஹசாரே: 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற தமிழக அணி!

ஒன்பது ஆட்டங்கள், ஒன்பது வெற்றிகள். இந்த வருட விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் தமிழக அணிக்குக் கிடைத்த வெற்றிகள் அனைத்தும் அட்டகாசமானவை.

News image
Updated On :16 அக்டோபர் 2019, 11:19 am

எழில்

ஒன்பது ஆட்டங்கள், ஒன்பது வெற்றிகள். இந்த வருட விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் தமிழக அணிக்குக் கிடைத்த வெற்றிகள் அனைத்தும் அட்டகாசமானவை. யாரும் எதிர்பாராதவை. இதன்மூலம் விஜய் ஹசாரே போட்டியின் காலிறுதிக்குத் தமிழக அணி தகுதியடைந்துள்ளது.

குஜராத்துக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய தமிழக அணி மீண்டும் அருமையாக பேட்டிங் செய்து, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 94, முகுந்த் 79, வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் எடுத்தார்கள். குஜராத்தின் பிபின்பாய், அர்ஸான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். தமிழக அணி போலவே தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பெற்ற குஜராத் அணி, இந்த ஆட்டத்தில் தமிழக அணிக்குச் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த வருடப் போட்டியில் தமிழக அணியின் பேட்டிங்குக்கு நிகராகப் பந்துவீச்சும் அமைந்ததால் பல வெற்றிகள் சுலபமாகக் கிடைத்தன. அதேபோல இன்றும் பந்துவீச்சு பிரமாதமாக இருந்தது. குஜராத் அணி, 42.2 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தமிழக அணியில் முகமது சலீம் 3 விக்கெட்டுகளும் எம். அஸ்வின் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இதனால் குரூப் சி பிரிவின் புள்ளிகள் பட்டியலில் 9 வெற்றிகளுடன் முதல் இடம் பிடித்தது தமிழக அணி. 8 வெற்றிகளுடன் உள்ள குஜராத் அணிக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது. 

78 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தமிழக அணி, தொடர்ச்சியாகப் பெற்ற 9-வது வெற்றியின் மூலம் விஜய் ஹசாரே போட்டியின் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.