திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார் இந்திய மல்யுத்த வீராங்கனை!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்...

News image
Updated On :18 செப்டம்பர் 2019, 7:16 am

எழில்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இதன்மூலமாக, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதியடைந்துள்ளார்.

கஜகஸ்தானின் நுர்சுல்தான் நகரில் நடைபெற்ற மகளிர் 53 கிலோ எடைப்பிரிவில், முதலில் உக்ரைனைச் சேர்ந்த யுலியாவை 5-0 எனத் தோற்கடித்தார் வினேஷ் போகட். அடுத்ததாக, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாராவை 8-2 எனத் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நுழைந்துள்ளார். 

இதன்மூலமாக, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியடைந்த முதல் இந்திய மல்யுத்த வீரர் என்கிற பெருமையை வினேஷ் பெற்றுள்ளார். அடுத்ததாக கிரீஸைச் சேர்ந்த இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மரியா ப்ரவோலராகியைச் சந்திக்கவுள்ளார். இதில் வெல்லும் வீராங்கனைக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கும். 

வினேஷ் போகட், 2018 காமன்வெல்த் கேம்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.