திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

தோனியும் ரோஹித் சர்மாவும் அணியில் இருப்பதால் தான் கோலியால் வெற்றிகரமான கேப்டனாக இருக்க முடிகிறது: கம்பீர்

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி வெற்றிகரமான கேப்டனாக இருப்பதற்குக் காரணம், இந்திய அணியில் தோனி, ரோஹித் சர்மா என... 

News image
Updated On :21 செப்டம்பர் 2019, 9:26 am

எழில்

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி வெற்றிகரமான கேப்டனாக இருப்பதற்குக் காரணம், இந்திய அணியில் தோனி, ரோஹித் சர்மா என இரு வெற்றிகரமான கேப்டன்கள் இருப்பதால் தான் என முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் கம்பீர் கூறியதாவது:

ஒரு கேப்டனாக இன்னும் கோலி நீண்டதூரம் செல்லவேண்டும். உலகக் கோப்பை அவருக்கு நல்லவிதமாக அமைந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் அவரால் வெற்றிகரமான கேப்டனாக இருக்கமுடிவதற்குக் காரணம், இந்திய அணியில் தோனி, ரோஹித் சர்மா என இரு வெற்றிகரமான கேப்டன்கள் இருப்பதால் தான். 

ஐபிஎல் போன்ற போட்டிகளில் உங்களுடைய தலைமைப்பண்பு சோதிக்கப்படும். ஏனெனில் அப்போதுதான் இதர வீரர்கள் உங்களுக்கு ஆதரவளிக்கமாட்டார்கள். நான் மிகவும் உண்மையாக இருக்கிறேன், இதைச் சொல்லும்போது. மும்பை இந்தியன்ஸுக்காக ரோஹித் சர்மாவும் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக தோனியும் சாதித்துள்ளதைப் பாருங்கள். அத்துடன் ஆர்சியின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களுக்கே தெரியும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.