கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

தோனியை சிஎஸ்கே தேர்வு செய்தபோது என் இதயத்தை வாள் துளைத்தது: மனம் திறக்கும் தினேஷ் கார்த்திக்

சிஎஸ்கே அணி தன்னைத் தேர்வு செய்யும் என 13 வருடங்களாகக் காத்திருப்பதாக பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

சிஎஸ்கே அணி தன்னைத் தேர்வு செய்யும் என 13 வருடங்களாகக் காத்திருப்பதாக பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

2008-ல் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. நான் தான் தமிழ்நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர், நாட்டுக்காகவும் விளையாடுகிறேன், எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் என்னைத் தேர்வு செய்யும் என எண்ணியிருந்தேன். அப்படித் தேர்வு செய்தபிறகு என்னை கேப்டன் பதவியில் அமர்த்துவார்களா என்பது மட்டுமே கேள்வியாக இருந்தது. முதல் வீரராக தோனியை 1.5 மில்லியன் டாலருக்குத் தேர்வு செய்தார்கள்.

நான் இருந்த அறையில் தான் தோனியும் இருந்தார். சிஎஸ்கே அணி தன்னைத் தேர்வு செய்யவுள்ளதாக தோனி என்னிடம் கூறவில்லை. ஒருவேளை அவருக்கு அது தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், தோனியை சிஎஸ்கே தேர்வு செய்தது என் இதயத்தை வாள் துளைத்தது போலிருந்தது. என்னைப் பிறகு தேர்வு செய்வார்கள் என நினைத்தேன். ஆனால் 13 வருடங்கள் ஆகிவிட்டன. அவர்கள் என்னைத் தேர்வு செய்வார்கள் என்று இப்போதும் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் தில்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.