யு.எஸ். ஓபன் முதல் சுற்றுக்கு இந்திய வீரர் நேரடியாகத் தகுதி

யு.எஸ். ஓபன் முதல் சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
யு.எஸ். ஓபன் முதல் சுற்றுக்கு இந்திய வீரர் நேரடியாகத் தகுதி
Published on
Updated on
1 min read

யு.எஸ். ஓபன் முதல் சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய் தொற்றின் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அந்தந்த நாடுகளில் நடைபெற இருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, விம்பிள்டன் போட்டி இந்த ஆண்டு வரும் ஜூன் 29 முதல் - ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும், கரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் நிலையில் போட்டியை நடத்துவது தொடா்பாக கேள்வி எழுந்தது. இதையடுத்து இந்த வருட விம்பிள்டன் போட்டியை ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டது. மே 24- ஜூன் 7 தேதிகளில் நடைபெறவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி செப்டம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டி காலி அரங்கில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக உலகின் நெ.1 வீராங்கனை ஆஷ்லி பார்டி சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் பிரபல வீரர் நடாலும் இந்த வருட யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

பிரபல வீரர்கள் விலகியுள்ளதால் இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியின் முதல் சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார். 22 வயது சுமித், தரவரிசையில் 127-வது இடத்தில் உள்ளார். கடந்த வருட போட்டியின் முதல் சுற்றில் ஃபெடரருக்கு எதிராக மோதிய சுமித், முதல் சுற்றை வென்று ஆச்சர்யப்படுத்தினார். பிறகு 6-4, 1-6, 2-6, 4-6 என அந்த ஆட்டத்தில் தோற்றுப் போனார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com