இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஹாக்கி வீரர் மன்தீப் சிங்!

மன்தீப் சிங்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறிகள் எதுவும் இல்லாததால்...

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 5:19 am

DIN


இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் உள்ளிட்ட 5 ஹாக்கி வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மற்றொரு வீரர் மன்தீப் சிங்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய விளையாட்டு ஆணைய மையம் (சாய் அமைப்பு) தெரிவித்துள்ளது.

மன்ப்ரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண் குமார், கிருஷன் பதக் என ஐந்து வீரர்கள் கரோனாவால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டார்கள். ஆகஸ்ட் 4 முதல் பெங்களூரில் உள்ள சாய் அமைப்பில் ஹாக்கி பயிற்சி முகாம் நடைபெற்று வருகிற நிலையில் இத்தகவலை சாய் அமைப்பு தெரிவித்தது. 

இந்நிலையில் மன்தீப் சிங்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறிகள் எதுவும் இல்லாததால் சாய் வளாகத்திலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆறு வீரர்களும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்கள். அனைவரும் நல்ல உடல்நிலையில் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.