அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறுமா இங்கிலாந்து?

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில்...

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 7:53 am

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் தனது 3-வது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது இங்கிலாந்து அணி. 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்றதன் மூலம் விஸ்டன் கோப்பையைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு 146 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் இருந்தது. ஆனால் இரு டெஸ்டுகளில் வெற்றி பெற்று 80 புள்ளிகளைச் சேர்த்துக்கொண்டது. இதனால் 226 புள்ளிகளுடன் இந்தியா (360), ஆஸ்திரேலியா (296) ஆகிய அணிகளுக்கு அடுத்ததாக 3-ம் இடத்தைப் பிடித்தது. 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. இதனால் 40 புள்ளிகளைப் பெற்று தற்போது 266 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. இன்னொரு டெஸ்டில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்தை இங்கிலாந்து அணி பிடித்துவிடும்.

இதனால் இன்னொரு டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் வெல்ல இங்கிலாந்து அணியினர் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.