குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோனிக்காக வித்தியாசமான கைத்தறிப் போர்வையை நெய்த சென்னிமலை நெசவாளர்!

தோனி மீதான அன்பை தமிழ்நாட்டு ரசிகர்கள் விதவிதமாக வெளிப்படுத்துவார்கள்...

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:58 am

DIN

தோனி மீதான அன்பை தமிழ்நாட்டு ரசிகர்கள் விதவிதமாக வெளிப்படுத்துவார்கள். அதில் ஒருவகை தான் இது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையைச் சேர்ந்த 41 வயது அப்புசாமி, தோனி தன் மகளுடன் இருப்பது போன்ற உருவப்படத்தைக் கொண்டு கைத்தறிப் போர்வையை நெய்து அசத்தியுள்ளார்.

சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வடிவமைப்பாளராகப் பணி செய்து வருகிறார் அப்புசாமி. தோனி மீதான தனது அன்பை வெளிப்படுத்த வித்தியாசமான முறையில் இந்தக் கைத்தறிப் போர்வையை நெய்துள்ளார். தந்தை - மகள் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, 430 கிராம் எடை கொண்ட இந்தப் போர்வையை உருவாக்கியுள்ளார். தோனியை நேரில் சந்தித்து இந்தப் போர்வையை வழங்க வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். தோனியை அவருடைய மகளுடன் காணும்போது என் மகளின் குழந்தைப் பருவக் காலங்கள் நினைவுக்கு வரும். அதனால் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன் என்று அவர் பேட்டியளித்துள்ளார். 

இதற்கு முன்பு, சச்சினுக்கும் இதேபோல அவருடைய உருவப்படத்தைத் திரைச்சீலையில் உருவாக்கி அதனை சச்சினிடம் வழங்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.