மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பென் ஸ்டோக்ஸ் தந்தை காலமானார்

​இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸின் தந்தை ஜெராட் ஸ்டோக்ஸ் காலமானார்.

News image
கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அடித்த சதத்தை தந்தைக்கு அர்ப்பணித்தார் ஸ்டோக்ஸ்
Updated On :8 டிசம்பர் 2020, 4:39 pm

DIN


இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸின் தந்தை ஜெராட் ஸ்டோக்ஸ் காலமானார்.

ஜெராட் ஸ்டோக்ஸ் நீண்ட நாள்களாக மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் முன்னாள் ரக்பி வீரர். 

தந்தையின் சிகிச்சையின்போது உடனிருக்க வேண்டும் என்பதால் கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இடையிலேயே விலகினார் பென் ஸ்டோக்ஸ். இதன் காரணமாகத்தான், கடந்த ஐபிஎல் சீசனின் பாதியில்தான் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தார்.

இந்த நிலையில் ஜெராட் ஸ்டோக்ஸ் காலமாகியுள்ளார். 

புற்றுநோய் பாதிப்பு பற்றி ஜெராட் ஸ்டோக்ஸ் முன்பு ஒரு பேட்டியில் கூறியதாவது:

"தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி 4 டெஸ்டுகளில் விளையாடியது. என் மகனின் ஆட்டத்தைக் காண அங்குச் சென்றிருந்தேன். அப்போது தான் எனக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நியூசிலாந்துக்குத் திரும்பினேன். கடந்த ஜனவரி மாதம் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைக் கண்டறிந்தார்கள். இது எப்படி உருவானது என யாருக்கும் தெரியவில்லை. என் வாழ்க்கை முழுக்க பலமுறை தலையில் அடிபட்டுள்ளது. அதனால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்" என்று கூறினார்.

பென் ஸ்டோக்ஸ் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் தென் ஆப்பிரிக்காவில் உள்ளார். டி20 தொடரை இங்கிலாந்து முழுமையாகக் கைப்பற்றியது. கரோனா பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒத்திவைக்க இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புக்கொண்டன.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கையில், "இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டவுனிலிருந்து வியாழக்கிழமை புறப்படும்" என்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.