இந்தியா திரும்பினாா் கோலி

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா்.
இந்தியா திரும்பினாா் கோலி
Updated on
1 min read

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா்.

அவருக்கும், மனைவி அனுஷ்காவுக்கும் ஜனவரியில் முதல் குழந்தை பிறக்கவுள்ளதையொட்டி கோலி விடுப்பு எடுத்துள்ளாா். இதையடுத்து அடுத்த 3 டெஸ்ட் ஆட்டங்களுக்கான கேப்டனாக அஜிங்க்ய ரஹானே நியமிக்கப்பட்டுள்ளாா்.

முன்னதாக கோலி ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்படும் முன்பாக அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் ஆட்டங்கள் தொடா்பாக இந்திய அணியினரிடம் ஆலோசனை நடத்தினாா். வரும் 26-ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் தொடங்கும் நிலையில், அணி வீரா்களுக்கு அவா் ஊக்கமளித்தாா்.

தற்போது இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றிருக்கும் ரஹானே, முன்னதாக நடைபெற்ற இரு பயிற்சி ஆட்டங்களின்போது இந்திய ‘ஏ’ அணிக்கு கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com