திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஒருநாள் தொடர்: ரிஷப் பந்தை நீக்கிவிட்டு விக்கெட் கீப்பராகிறாரா கே.எல். ராகுல்?

இப்போதைக்கு ரிஷப் பந்த் தான் எங்களுடைய முதன்மையான விக்கெட் கீப்பர்...

News image
Updated On :13 ஜனவரி 2020, 11:44 am

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகிய மூவரும் விளையாட விளையாட வாய்ப்புள்ளதாக கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இதனால் இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிகிறது. இந்திய அணியில் ஜடேஜா, ஜாதவ் ஆகிய இருவரும் கடைசி ஓவர்களில் பேட்டிங் செய்ய தேவைப்படுவதால் ரிஷப் பந்த் நீக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராக்கிவிட்டால் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகிய மூவரும் இந்திய அணியில் இடம்பெறமுடியும். கூடவே ஜடேஜா, ஜாதவும் அணியில் பங்கேற்று பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்க முடியும். இதனால் தான் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகிய மூவரும் விளையாட விளையாட வாய்ப்புள்ளதாக கோலி பேட்டியளித்தார் என அறியப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் கூறியதாவது: ராகுலை விக்கெட் கீப்பராகவும் செயல்பட வைப்பது குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. இப்போதைக்கு ரிஷப் பந்த் தான் எங்களுடைய முதன்மையான விக்கெட் கீப்பர். ராகுலும் கீப்பிங் செய்ய முடியும். அணிக்குத் தேவைப்படும்போது அதைப் பயன்படுத்திக்கொள்வோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.