அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிரபல முன்னாள் கால்பந்து வீரருக்கு கரோனா பாதிப்பு!

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயினின் முன்னாள் கால்பந்து வீரரான சேவியர் ஹெர்ணாண்டஸ் என்கிற ஸவி கூறியுள்ளார்.

News image
Updated On :25 ஜூலை 2020, 10:41 am

DIN

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயினின் முன்னாள் கால்பந்து வீரரான சேவியர் ஹெர்ணாண்டஸ் என்கிற ஸவி கூறியுள்ளார்.

ஸ்பெயின் அணி 2000 ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றபோது அந்த அணியில் ஸவி இடம்பெற்றிருந்தார். ஸ்பெயின் அணிக்காக 133 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2010 உலகக் கோப்பையை ஸ்பெயின் அணி வென்றதற்கு ஸவி முக்கியக் காரணமாக இருந்தார். 2014 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். உலகின் மிகச்சிறந்த நடுக்கள கால்பந்து வீரராக ஸவி அறியப்படுகிறார். 

கத்தாரைச் சேர்ந்த கால்பந்து கிளப்பான அல் சத் அணியின் மேலாளராக ஸவி தற்போது பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

கத்தார் ஸ்டார்ஸ் லீக் போட்டியில் பணியாற்றியபோது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. நல்ல உடல்நிலையில் உள்ளேன். எனினும் விதிமுறைகளின்படி தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

பார்சிலோனா கிளப்புக்காக 505 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸவி, அல் சத் அணிக்காக 2015 முதல் விளையாடி வந்தார். பிறகு, 2019-ல் அந்த அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.