தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ராகுல், கெயில் அதிரடி ஆட்டம்: பெங்களூர் அணிக்கு 180 ரன்கள் இலக்கு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 179 ரன்கள் குவித்தது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 3:43 pm

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 179 ரன்கள் குவித்தது.

14-வது ஐபிஎல் சீசனின் 26-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராத் கோலி முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கே .எல்.ராகுல் - பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். இதில் பிரப்சிம்ரன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிறிஸ் கெயில், ராகுலுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற கேப்டன் ராகுல் மட்டும் தனிஒருவனாக களத்தில் நின்று போராடினார். சிறப்பாக விளையாடிய அவர் 57 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.