யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆசிய கோப்பையில் பங்கேற்ற இந்திய ஹாக்கி வீராங்கனைக்கு கரோனா

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய மகளிா் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்ற சில இந்திய வீராங்கனைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

News image
இந்திய மகளிர் ஹாக்கி அணி (கோப்புப் படம்)
Updated On :8 டிசம்பர் 2021, 9:06 am

DIN

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய மகளிா் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்ற  இந்திய வீராங்கனைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தென்கொரியாவின் டாங்கே நகரில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும்-தாய்லாந்தும் தொடக்க ஆட்டத்தில் மோதின. ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி 13-0 என்கிற கணக்கில் தாய்லாந்தை வென்றனர்.

இந்நிலையில் இன்று தென்கொரியாவுடன் நடக்க இருந்த போட்டியில் இந்திய வீராங்கனைக்கு ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இன்றைய போட்டி ரத்து செய்யப்பபட்டிருக்கிறது. 

முன்னதாக, கடந்த திங்கள்கிழமை மலேசியா-இந்தியா ஆட்டம் நடைபெறவிருந்த நிலையில், மலேசிய வீராங்கனைக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.