கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கோலிக்கு பெண் குழந்தை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு திங்கள்கிழமை பிற்பகலில் பெண் குழந்தை பிறந்தது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 11:43 pm

DIN


புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு திங்கள்கிழமை பிற்பகலில் பெண் குழந்தை பிறந்தது.

விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017-இல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கர்ப்பமான அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வந்த விராட் கோலி, அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை முடித்த பிறகு விடுப்பில் நாடு திரும்பினார். 

இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவுக்கு திங்கள்கிழமை பிற்பகலில்  பெண் குழந்தை பிறந்தது.  தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை சுட்டுரை மூலம் அறிவித்துள்ள கோலி, "எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அனைவருடைய அன்புக்கும், பிரார்த்தனைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. தாயும், சேயும் நலமாக உள்ளனர்' என குறிப்பிட்டுள்ளார். 

சச்சின் டெண்டுல்கர், ஹார்திக் பாண்டியா உள்ளிட்ட பிரபலங்கள் ஏராளமானோர் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.