இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

4-ஆவது டெஸ்ட்: ஹனுமா விஹாரி விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய வீரர் ஹனுமா விஹாரி காயம் காரணமாக விலகியுள்ளார்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 11:45 pm

DIN


புது தில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய வீரர் ஹனுமா விஹாரி காயம் காரணமாக விலகியுள்ளார்.

சிட்னி டெஸ்ட் போட்டியில் அஸ்வினுடன் இணைந்து அபாரமாக ஆடி இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்ட ஹனுமா விஹாரிக்கு தொடைப் பகுதியில் தசைநார் முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் கடைசி போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "ஹனுமா விஹாரிக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகே அவருடைய காயத்தின் நிலை குறித்து தெரியவரும். லேசான தசைநார் முறிவாக இருந்தாலும்கூட, அவர் குறைந்தபட்சம் 4 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியமாகும். 4-ஆவது டெஸ்ட் போட்டிக்கு 3 நாள்கள் மட்டுமே உள்ளதால், ஹனுமா விஹாரி விளையாட வாய்ப்பில்லை. இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் விளையாடமாட்டார்' என தெரிவித்தன.

கடைசி டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரிக்குப் பதிலாக மயங்க் அகர்வால் களமிறக்கப்படுவார் என தெரிகிறது. இதேபோல் இடது கை பெருவிரலில் காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் விளையாடுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. 4-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 15-ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.