இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வர்ணனையில் கூறிய மோசமான உதாரணம்: மன்னிப்பு கோரினார் தினேஷ் கார்த்திக்

அப்படிப் பேசியதற்காக என் மனைவியும் என் அம்மாவும் என்னை நன்குக் கண்டித்தார்கள்...

News image
Updated On :6 ஜூலை 2021, 11:45 am

DIN

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டத்தில் வர்ணனை செய்த தினேஷ் கார்த்திக், மோசமான உதாரணத்தைக் கூறியதற்காக விமர்சனத்துக்கு ஆளானார்.

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. இந்த ஆட்டத்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்காக தினேஷ் கார்த்திக் வர்ணனை செய்தார். 

இந்தியாவுக்காக 26 டெஸ்டுகள், 94 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்காக வர்ணனையாளராகப் பணியாற்றி பாராட்டுகளைப் பெற்றார். தற்போது இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடரிலும் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார்.

2-வது ஒருநாள் ஆட்டத்தின் வர்ணனையின்போது பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் பேட் பற்றி வர்ணனையாளர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது தினேஷ் கார்த்திக் பேசியதாவது: பேட்கள் மீதான அதிருப்தி பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் இருக்கும். பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்குத் தங்களுடைய பேட்களைப் பிடிக்காது. அவர்களுக்கு அடுத்த பேட்ஸ்மேன்களின் பேட்களைப் பிடிக்கும். பேட் என்பது அடுத்த வீட்டு மனைவி போல. அவர்கள் எப்போதும் நன்றாக இருப்பது போல இருக்கும் என்றார். 

பேட்களைப் பற்றிய உரையாடலின்போது அடுத்த வீட்டு மனைவி பற்றிய கருத்தை நுழைத்து மோசமாகப் பேசியதற்காகச் சமூகவலைத்தளங்களில் பலரும் தினேஷ் கார்த்திக்கை விமர்சித்தார்கள். 

இந்நிலையில் தன்னுடைய வர்ணனைக்கு மன்னிப்பு கோரியுள்ளார் தினேஷ் கார்த்திக். 3-வது ஒருநாள் ஆட்டத்தின் வர்ணனையின்போது அவர் கூறியதாவது:

கடைசி ஆட்டத்தில் நடந்ததற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். அதை நான் சொல்ல எண்ணவில்லை. எல்லாமே தவறாகிவிட்டது. அனைவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன். நிச்சயமாக அப்படிப் பேசக்கூடாது. இது மீண்டும் நடக்காது. அப்படிப் பேசியதற்காக என் மனைவியும் என் அம்மாவும் என்னை நன்குக் கண்டித்தார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.