மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கவுன்டி கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய அஸ்வின் (விடியோ)

2-வது இன்னிங்ஸில் அற்புதமாகப் பந்துவீசி சோமர்செட் அணியை 69 ரன்களுக்குள் சுருட்டினார்...

News image
Updated On :15 ஜூலை 2021, 5:10 am

DIN

இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியாக சர்ரே அணியில் இடம்பெற்று கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடினார் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் டெஸ்ட் உலக சாம்பியன் ஆனது நியூசிலாந்து அணி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையை இந்தியாவின் அஸ்வின் பெற்றார். 14 ஆட்டங்களில் 71 விக்கெட்டுகளை எடுத்தார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தயாராவதற்காக கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் அஸ்வின். சர்ரே அணியில் இடம்பெற்ற அஸ்வின், ஓவல் மைதானத்தில் நடைபெற்ற சோமர்செட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் நாளில் 28 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். காயமடைந்த நியூசி. வீரர் கைல் ஜேமிசனுக்குப் பதிலாக அஸ்வின் இடம்பெற்றார். 

சோமர்செட் அணி தனது முதல் இன்னிங்ஸில் 148.5 ஓவர்களில் 429 ரன்கள் எடுத்தது. அஸ்வின் 43 ஓவர்கள் வீசி 99 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். அதிக விக்கெட் எடுக்காமல் போனாலும் 43 ஓவர்கள் வீசியதால் டெஸ்ட் தொடருக்கான நல்ல பயிற்சி அஸ்வினுக்குக் கிடைத்தது. 

இந்நிலையில் 2-வது இன்னிங்ஸில் அற்புதமாகப் பந்துவீசி சோமர்செட் அணியை 69 ரன்களுக்குள் சுருட்டினார். அஸ்வினுக்கு 6 விக்கெட்டுகள் கிடைத்தன. 2-வது இன்னிங்ஸில் சர்ரே அணி, 4 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தது. 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ல் தொடங்குகிறது. 

4-ம் நாள் ஆட்டத்தின் முழு விடியோ

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.