அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முதல் பந்தில் சிக்ஸர்: சொல்லி அடித்த இஷான் கிஷன்

என் பிறந்த நாளன்று நன்றாக விளையாடி அணிக்கு வெற்றியை அளிக்க எண்ணினேன்.

News image
Updated On :19 ஜூலை 2021, 8:10 am

DIN


இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கவுள்ளேன் என அனைவரிடமும் கூறியதாக இளம் வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். 

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 262/9 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய இந்திய அணி 263/3 ரன்களை எடுத்து வென்றது. கேப்டன் தவான் ஆட்டமிழக்காமல் 86 ரன்களை எடுத்தார். பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்களை விளாசினார். 33 பந்துகளில் தனது அரை சதத்தைக் கடந்த அறிமுக வீரர் இஷான் கிஷன், 2 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார்.

2001-க்குப் பிறகு அறிமுக ஆட்டத்தில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இளம் வீரர் இஷான் கிஷன். 

இந்நிலையில் சோனி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இஷான் கிஷன் கூறியதாவது:

முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பேன் என இந்திய அணியின் ஓய்வறையில் இருந்த அனைவரிடமும் சொல்லியிருந்தேன். பந்து எங்கிருந்தாலும் நான் சிக்ஸர் அடிக்க இருந்தேன். இது அனைவருக்கும் தெரியும். நல்ல ஆடுகளம், என்னுடைய பிறந்த நாள், என்னுடைய முதல் ஒருநாள் ஆட்டம் என எல்லாமே எனக்குச் சாதகமாக இருந்தன. என் பிறந்த நாளன்று நன்றாக விளையாடி அணிக்கு வெற்றியை அளிக்க எண்ணினேன். பயிற்சியின்போதே நான் 3-ம் நிலை வீரராகக் களமிறங்குவேன் என டிராவிட் கூறினார் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.