மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேன் வில்லியம்சனுக்கு இதுதான் திட்டம்: சிராஜ்

​உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வாய்ப்பு கிடைத்தால் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை விரக்தியடையச் செய்ய முயற்சிப்பேன் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 ஜூன் 2021, 10:39 am

DIN


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வாய்ப்பு கிடைத்தால் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை விரக்தியடையச் செய்ய முயற்சிப்பேன் என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணி நாளை (புதன்கிழமை) இங்கிலாந்து புறப்படுகிறது. இந்த நிலையில், கேன் வில்லியம்சனுக்கு தான் வகுத்துள்ள திட்டம் குறித்து சிராஜ் தெரிவித்துள்ளார்.

சிராஜ் கூறியது:

"சோர்வடையாமல் குறிப்பிட்ட ஒரு இடத்தில் தொடர்ச்சியாக பந்துவீச முயற்சிப்பேன். கேன் வில்லியம்சனுக்கு நெருக்கடியை உண்டாக்க ரன் எடுக்க முடியாத அளவுக்கு பந்துவீசுவதில் கவனம் செலுத்துவேன். அது அவரை 'ஷாட்' ஆடத் தூண்டும். அப்போது அவர் ஆட்டமிழப்பதற்கு அதிக வாய்ப்பு உருவாகும்.    

இங்கிலாந்தில் அதிகளவில் 'ஸ்விங்' ஆகும். எனவே, பேட்ஸ்மேன்கள் பந்துகளை முன்வந்து ஆட வைக்க முயற்சிப்பேன். 

இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பு நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டோம். ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்ட பிறகு எவ்வித கிரிக்கெட் ஆட்டங்களிலும் நாங்கள் விளையாடவில்லை. ஆனால், நியூசிலாந்து எங்களுக்கு முன்பே இங்கிலாந்து சென்றடைந்து இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. எனவே, ஆட்டங்கள் மட்டுமின்றி இங்கிலாந்து சூழலுக்கு ஏற்பவும் ஒத்துப்போக அவர்களுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும்" என்றார் சிராஜ்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.