மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

4-வது டெஸ்ட்: தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 144/5

நன்கு விளையாடி அரை சதமெடுத்த பென் ஸ்டோக்ஸ், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

News image
Updated On :4 மார்ச் 2021, 9:05 am

DIN

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டை இரு நாள்களில் வென்றது இந்தியா. டெஸ்ட் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், ஆமதாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் இடம்பெற்றுள்ளார்கள். இங்கிலாந்து அணியில் பிராட், ஆர்ச்சருக்குப் பதிலாக லாரன்ஸ், பெஸ் இடம்பெற்றுள்ளார்கள்.

6-வது ஓவரை அக்‌ஷர் படேல் வீச வந்தார். 2-வது பந்திலேயே டாம் சிப்லியை போல்ட் செய்தார். சிப்லி 2 ரன்கள் மட்டும் எடுத்தார். அக்‌ஷர் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று, 9 ரன்களில் ஆட்டமிழந்தார் கிராவ்லி. இதன்பிறகு கேப்டன் ரூட்டை 5 ரன்களில் எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார் சிராஜ். ஸ்டோக்ஸ் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். சிராஜ் ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார். 

பேர்ஸ்டோவ், ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் கவனமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இந்தக் கூட்டணி 44 ரன்கள் எடுத்து இங்கிலாந்து ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது.

முதல் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி, 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது. பேர்ஸ்டோவ் 28, ஸ்டோக்ஸ் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

உணவு இடைவேளைக்குப் பிறகு பேர்ஸ்டோவை 28 ரன்களில் வீழ்த்தினார் சிராஜ். நன்கு விளையாடி அரை சதமெடுத்த பென் ஸ்டோக்ஸ், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் 5 விக்கெட்டுகளைக் குறைந்த ரன்களில் வீழ்த்தியதால் இந்திய பந்துவீச்சாளர்கள் உற்சாகம் ஆனார்கள்.

இதையடுத்து முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 56 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. போப் 21, டான் லாரன்ஸ் 15 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். அக்‌ஷர் படேல், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.