விஜய் ஹசாரே போட்டி: அரையிறுதியில் மோதும் அணிகள்!
விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் உத்தரப் பிரதேசமும் மும்பையும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.


விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் உத்தரப் பிரதேசமும் மும்பையும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
இன்று நடைபெற்று இரு காலிறுதி ஆட்டங்களில் உத்தரப் பிரதேசமும் மும்பையும் வெற்றி பெற்றன. தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் உத்தரப் பிரதேசம் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. உத்தரப் பிரதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. தில்லி அணி 234 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. செளராஷ்டிரம் அணி 5 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய மும்பை அணி, 41.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரித்வி ஷா ஆட்டமிழக்காமல் 185 ரன்கள் எடுத்து அசத்தினார்.
மார்ச் 11 அன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் குஜராத் - உத்தரப் பிரதேச அணிகள் மோதுகின்றன. அடுத்த அரையிறுதி ஆட்டத்தில் மும்பையும் கர்நாடகமும் மோதுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...