ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இந்திய அணி பயிற்சியாளர் பதவியை மறுத்தது ஏன்?: ரிக்கி பாண்டிங் பதில்

ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வாகியுள்ளார். 

News image
Updated On :19 நவம்பர் 2021, 11:18 am

DIN

குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காக இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை மறுத்ததாக முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 168 டெஸ்டுகள், 375 ஒருநாள், 17 டி20 ஆட்டங்களில் பாண்டிங் விளையாடியுள்ளார். 2012-ல் ஓய்வு பெற்றார். 

ஐபிஎல் போட்டியில் தில்லி அணியின் பயிற்சியாளராக உள்ளார் பாண்டிங். டி20 உலகக் கோப்பையுடன் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வாகியுள்ளார். 

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி தன்னைத் தேடி வந்ததாகவும் அதை மறுத்தது குறித்தும் பேட்டியளித்துள்ளார் பாண்டிங். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

நேரம் தான் அப்பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம். ஆஸ்திரேலிய அணிக்குப் பயிற்சியளிக்க ஆர்வமாக உள்ளேன். ஆனால் விளையாடிய காலத்தில் குடும்பத்துடன் என்னால் அதிக நாள்கள் செலவழிக்க முடியவில்லை. எனக்கு 7 வயது மகன் உள்ளான். ஒரு வருடத்தில் 300 நாள்களை வெளியே செலவழிக்க முடியாது. இதனால் தான் ஐபிஎல் போட்டிக்கு மட்டும் பயிற்சியளிப்பது எனக்கு வசதியாக உள்ளது. பயிற்சியாளர் பதவி என்பது கிட்டத்தட்ட வயதானவர்களுக்கானது. என்னைப் போன்ற இளம் குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தினருக்கு அல்ல. ஐபிஎல் போட்டியின்போது இந்திய அணிக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றும்படி கோரிக்கை வந்தது. என்னால் பல நாள்கள் குடும்பத்தை விட்டு இருக்க முடியாது. ஐபிஎல் போட்டிக்கும் என்னால் பயிற்சியளிக்க முடியாது. ராகுல் டிராவிடுக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளார்கள். பயிற்சியாளர் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டதை அறிந்து ஆச்சர்யமடைந்தேன் என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.