இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விஜய் ஹசாரே: பரோடா அணியிடம் தமிழகம் அதிர்ச்சித் தோல்வி

20.2 ஓவர்களிலேயே 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 ரன்கள் வித்தியாசத்தில்...

News image
கிருனால் பாண்டியா (கோப்புப் படம்)
Updated On :14 டிசம்பர் 2021, 10:21 am

DIN

விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் பரோடா அணியிடம் தமிழக அணி அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது.

குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு முதல் மூன்று ஆட்டங்களில் மும்பை, கர்நாடகம், பெங்கால் என பெரிய அணிகளை எளிதாக வென்றது. கடைசி இரு ஆட்டங்களில் புதுச்சேரி, பரோடா என இரு எளிதான அணிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

புதுச்சேரி அணிக்கு எதிராக 1 ரன்னில் தோற்றது. இந்நிலையில் பரோடாவை இன்று எதிர்கொண்டது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பரோடா அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தமிழக அணியின் சிறப்பான பந்துவீச்சால் 39 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பரோடா இழந்தது. கிருனால் பாண்டியா அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். எம். சித்தார்த், வாரியர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

மதிய உணவு இடைவேளையின்போது தமிழக அணி, 11.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்துத் தடுமாறியது. 

எப்படியும் இலக்கை அடைந்துவிடும் என்று எண்ணிய நிலையில் 20.2 ஓவர்களிலேயே 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் பரோடாவிடம் மோசமான தோல்வியை அடைந்தது தமிழக அணி. சஞ்சய் யாதவ் அதிகபட்சமாக 19 ரன்கள் எடுத்தார். பரோடாவின் பார்கவ் பட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

5 ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை எடுத்துள்ளது தமிழக அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.