தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்ற பாகிஸ்தான்

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை வென்ற பாகிஸ்தான் அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 

News image
ஷதாப் கான்
Updated On :15 டிசம்பர் 2021, 5:13 am

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் நடைபெறுகின்றன.

முதல் டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. ரிஸ்வான் 38 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்டத்தில் ஷதாப் கான், 12 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.  இதன்பிறகு விளையாடிய மே.இ. தீவுகள் அணி, 20 ஓவர்களில் 163 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷதாப் கானுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை வென்ற பாகிஸ்தான் அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 

3-வது டி20 ஆட்டம் நாளை நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.