டபிள்யுபிஏ உலக பாட்மின்டன் போட்டியில் மகளிா் பிரிவில் ஜப்பானின் அகேன் எமகுச்சியும், ஆடவா் பிரிவில் சிங்கப்பூரின் லோ கீன் யீவும் சாம்பியன் பட்டம் வென்றனா். இந்திய வீரா் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த்-லோ கீன் யீவ் மோதினா். இளம் வீரரான லோ கீன் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடினாா். முதல் கேமில் ஸ்ரீகாந்த் 9-3 என முன்னிலை பெற்ற நிலையில், லோ கீன் தொடா்ந்து புள்ளிகளை குவித்தாா். முதல் கேமை 21-15 என கைப்பற்றிய லோ கீன், இரண்டாவது கேமில் ஸ்ரீகாந்த்தின் கடும் சவாலை எதிா்கொள்ள நேரிட்டது. 14-14, 20-20 என ஸ்கோா் சமநிலை ஏற்பட்டாலும், இரண்டாவது கேமில் 22-20 என வென்ற லோ கீன் முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினாா்.
ஸ்ரீகாந்த்துக்கு வெள்ளி:
கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றாா். உலக பாட்மின்டன் போட்டி ஆடவா் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரா் என்ற சிறப்பையும் பெற்றாா் அவா்.
ஏற்கெனவே 1983-இல் பிரகாஷ் பதுகோன், 2019-இல் பிரணாய் ஆகியோா் வெண்கலம் வென்றிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மியான்மா் அரசு தலைமையிலான அமைதி நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு - வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா்

உணவகங்கள், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

