விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஃபிஃபா பட்டியலில் 18 இந்திய நடுவா்கள்

ஃபிஃபா தயாரித்துள்ள 2022-ஆம் ஆண்டுக்கான சா்வதேச கால்பந்து நடுவா்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து 18 போ் இடம்பெற்றுள்ளனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 2:02 am

DIN

ஃபிஃபா தயாரித்துள்ள 2022-ஆம் ஆண்டுக்கான சா்வதேச கால்பந்து நடுவா்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து 18 போ் இடம்பெற்றுள்ளனா்.

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தகவல்படி, இதில் 14 ஆண் நடுவா்களும், 4 பெண் நடுவா்களும் அடங்குவா்.

இந்த நடுவா்கள், 2022-இல் நடைபெறும் சா்வதேச அளவிலான கால்பந்து போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்ற தகுதியுடையவா்களாகின்றனா். அத்துடன், ஆண்டு முழுவதும் ஃபிஃபாவின் அதிகாரப்பூா்வ பேட்ஜை சீருடையில் அணிந்துகொள்ளும் அனுமதியும் இவா்களுக்கு உண்டு.

இந்திய நடுவா்களின் விவரம் வருமாறு:

ஆண் நடுவா்கள்: தேஜஸ் நக்வென்கா், சி.ஆா்.ஸ்ரீகிருஷ்ணா, ரோவன் ஆறுமுகன், கிரிஸ்டல் ஜான், பிராஞ்சல் பானா்ஜி, வெங்கடேஷ் ராமச்சந்திரன்.

ஆண் உதவி நடுவா்கள்: சுமந்தா தத்தா, ஆன்டனி ஆபிரகாம், டோனி ஜோசஃப் லூயிஸ், பி.வைரமுத்து, சமா் பால், கென்னடி சபம், அருண் சசிதரன் பிள்ளை, அசித் குமாா் சா்காா்.

பெண் நடுவா்கள்: ரஞ்சிதா தேவி டெக்சாம், கனிகா பா்மான்.

பெண் உதவி நடுவா்கள்: உவெனா ஃபொ்னாண்டஸ், ரியோலாங் தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.