முகப்பு விளையாட்டு செய்திகள்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் ரூபா குருநாத்
By DIN | Published On : 31st December 2021 01:22 PM | Last Updated : 31st December 2021 01:25 PM | அ+அ அ- |

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை ரூபா குருநாத் ராஜிநாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) புதிய தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் 2019 செப்டம்பரில் பொறுப்பேற்றுக்கொண்டார். போட்டியின்றித் தேர்வான ரூபா குருநாத், பிசிசிஐ மாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் பெண் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார். வியாபாரம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்ததாக ரூபா குருநாத் கூறியுள்ளார். என். சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக அவர் பணியாற்றி வருகிறார். இதனால் ரூபா மீது இரட்டை ஆதாயக் குற்றச்சாட்டு எழுந்தது.
ரூபா குருநாத் தலைவராக இருந்த காலகட்டத்தில் தமிழக அணி அடுத்தடுத்த வருடங்களில் சையத் முஷ்டாக் அலி கோப்பைகளை வென்றுள்ளது. இந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிரான இரு டெஸ்டுகளும் ஐபிஎல் 2021 போட்டியின் சில ஆட்டங்களும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றன.