ஆஷஸ் தொடரில் விளையாடி வரும் ஆஸி. வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் மூன்று பயிற்சியாளர்கள், நான்கு குடும்ப உறுப்பினர்கள் என மொத்தமாக ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். போட்டி நடுவரும் முன்னாள் ஆஸி. வீரருமான டேவிட் பூன், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் வேகப்பந்துப் பயிற்சியாளர் ஜான் லூயிஸ், சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஜீதன் படேல், உடற்பயிற்சி நிபுணர் டேரன் வெண்டஸ் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவருடன் தொடர்பில் இருந்த காரணத்துக்காக இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் 4-வது டெஸ்டில் அவர் பங்கேற்க மாட்டார்.
இந்தச் சூழலில் ஆஸி. வீரர் டிராவிஸ் ஹெட் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இரு அணி வீரர்களுக்கும் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் டிராவிஸ் ஹெட் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மூன்று வீரர்களைப் புதிதாக டெஸ்ட் அணியில் சேர்த்துள்ளது ஆஸி. அணி. டிராவிட் ஹெட்டுக்குப் பதிலாக உஸ்மான் கவாஜா 4-வது டெஸ்டில் விளையாடவுள்ளார்.
கரோனா அறிகுறிகள் இன்றி உள்ள டிராவிஸ் ஹெட், தன்னுடைய துணையுடன் மெல்போர்னில் 7 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொண்டு பிறகு 5-வது டெஸ்டில் பங்கேற்கவுள்ளார்.பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 151 ரன்கள் எடுத்த ஹெட், அடிலெய்ட் டெஸ்டில் அரை சதமெடுத்தார்.
இரு அணி வீரர்களும் இன்று தனி விமானம் மூலமாக 4-வது டெஸ்ட் நடைபெறும் சிட்னிக்குச் செல்லவுள்ளார்கள். கரோனாவால் ஒரு வீரரும் தற்போது பாதிப்படைந்துள்ளதால் ஆஷஸ் தொடர் தொடர்ந்து நடைபெறுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


