மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பிரபல மே.இ. தீவுகள் வீராங்கனை டாட்டின் ஓய்வு அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீராங்கனை டாட்டின் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

News image
Updated On :1 ஆகஸ்ட் 2022, 12:20 pm

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீராங்கனை டாட்டின் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

31 வயது டாட்டின், 2008 முதல் 143 ஒருநாள், 126 டி20 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார். பேட்டிங்கில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3727 ரன்களும் டி20யில் 2697 ரன்களும் எடுத்துள்ளார். பந்துவீச்சில் ஒருநாள் கிரிக்கெட்டில் 72 விக்கெட்டுகளும் டி20யில் 62 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். காமன்வெல்த் 2022 போட்டிகளில் பார்படாஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் நிலவும் தற்போதைய சூழலில் என்னுடைய திறமையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்த முடியாததால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக டாட்டின் அறிவித்துள்ளார். 

2010-ல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 38 பந்துகளில் சதமடித்து குறைந்த பந்துகளில் டி20 சதமடித்த வீராங்கனை என்கிற பெருமையை அடைந்தார் டாட்டின். இந்த வருடம் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் மே.இ. தீவுகள் அணிக்கு எதிராகக் கடைசி ஓவரில் நியூசிலாந்து வெற்றி பெற ஆறு ரன்கள் தேவைப்பட்டன. அந்தக் கடைசி ஓவரை வீசிய டாட்டின், 2 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து தன்னுடைய அணிக்கு மறக்க முடியாத வெற்றியைத் தேடித் தந்தார். 

ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள டாட்டின், லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.