யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜிம்பாப்வே ஒருநாள்: சச்சின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

ஜிம்பாப்வே அணிக்கு எதிராகச் சதமடித்த இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில், புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2022, 12:20 pm

DIN

ஜிம்பாப்வே அணிக்கு எதிராகச் சதமடித்த இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில், புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3-வது ஒருநாள் ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடிய 22 வயது ஷுப்மன் கில், 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 97 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடித்தார். இது அவருடைய முதல் ஒருநாள் சதம்.

இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் அதிக ஒருநாள் ரன்களை எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷுப்மன் கில். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், 1998-ல் 127* ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை ஷுப்மன் கில் இன்று தாண்டியுள்ளார்.

ஜிம்பாப்வே நாட்டில் அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்

130 - ஷுப்மன் கில், 2022 
127* - சச்சின் டெண்டுல்கர், 1998
124* - ராயுடு, 2015
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.