பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில் முன்னேற்றம்

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய இளம் பேட்டர் ஷுப்மன் கில் 38-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

News image
Updated On :24 ஆகஸ்ட் 2022, 12:14 pm

DIN

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய இளம் பேட்டர் ஷுப்மன் கில் 38-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. இந்தியாவின் ஷுப்மன் கில் ஆட்டநாயகன், தொடர்நாயகன் ஆனார். சிறப்பாக விளையாடிய 22 வயது ஷுப்மன் கில், 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 97 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடித்தார். இது அவருடைய முதல் ஒருநாள் சதம்.

ஜிம்பாப்வே நாட்டில் அதிக ஒருநாள் ரன்களை எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷுப்மன் கில். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், 1998-ல் 127* ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை ஷுப்மன் கில் தாண்டியுள்ளார்.

இதன் காரணமாக ஒருநாள் தரவரிசையில் ஷுப்மன் கில் முன்னேற்றம் அடைந்துள்ளார். சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் அவர் 38-வது இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் ஆஸம் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 5-வது இடத்திலும் ரோஹித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.