பிசிசிஐயின் புதிய ஒப்பந்தத்தில் ரஹானே, இஷாந்த் சர்மா உள்ளிட்ட பிரபல வீரர்களின் பெயர்கள் இடம்பெறாது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிசம்பர் 21 அன்று பிசிசிஐ கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் வீரர்களுக்கான ஒப்பந்தம் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. கடந்த வருடம் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம்பெற்ற ரஹானே, இஷாந்த் சர்மா, சஹா ஆகிய பிரபல வீரர்கள், பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. ஒப்பந்தத்தில் ஏ+ பிரிவில் உள்ள வீரர்களுக்குத் தலா 7 கோடியும் ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்குத் தலா ரூ. 5 கோடியும் பி பிரிவில் உள்ள வீரர்களுக்குத் தலா ரூ. 3 கோடியும் சி பிரிவு வீரர்களுக்குத் தலா ரூ. 1 கோடியும் வழங்கப்படவுள்ளன.
தற்போது குரூப் சி பிரிவில் உள்ள சூர்யகுமார் யாதவ், பி பிரிவுக்கு நகர்த்தப்படுவார். நெ.1 டி20 பேட்டராக உள்ளதால் ஏ பிரிவில் இடம்பெறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல ஷுப்மன் கில்லும் சி பிரிவிலிருந்து பி பிரிவுக்குப் பதவி உயர்வு பெறவுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்து சாதனை படைத்த இஷான் கிஷனுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. டி20 அணியின் கேப்டன் பதவியைப் பெற்ற பாண்டியா, சி-லிருந்து பி பிரிவுக்குப் பதவி உயர்வு பெறவுள்ளார். இதுகுறித்த முறையான அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிவு!

சஞ்சு சாம்சன் மிகவும் அபாயகரமான வீரர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


