இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணியில் கோலி இல்லை!

ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணியில் கோலி இல்லை!
Updated on
1 min read

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 5-வது டெஸ்டில் தோற்ற இந்திய அணி, டி20 தொடரை 2-1 என வென்றது. ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

சேனா நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா (SENA) ஆகிய நாடுகளில் இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் தொடர்களில் தோல்வியடைந்துள்ளது இந்திய அணி. இங்கிலாந்தில் கடைசியாக 2018-ல் விளையாடிய ஒருநாள் தொடரில் 1-2 எனத் தோற்றது. 

லண்டனில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் கோலி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெறவில்லை. 

இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), பாண்டியா, ஜடேஜா, ஷமி, பும்ரா, சஹால், பிரசித் கிருஷ்ணா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com