மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வார்னேவின் கடைசி டிவிட்: ரசிகர்கள் வேதனை

மறைந்த ஆஸி. கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தன் டிவிட்டர் பக்கத்தில் கடைசியாகப் பதிவிட்ட டிவிட் ரசிகர்களை வேதனையடையச் செய்திருக்கிறது.

News image
Updated On :4 மார்ச் 2022, 3:18 pm

DIN

மறைந்த ஆஸி. கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தன் டிவிட்டர் பக்கத்தில் கடைசியாகப் பதிவிட்ட டிவிட் ரசிகர்களை வேதனையடையச் செய்திருக்கிறது.

ஆஸி.அணியில் நட்சத்திர பந்து வீச்சாளரான ஷேன் வார்னே(52)  மாரடைப்புக் காரணமாக தாய்லாந்தில் இன்று உயிரிழந்தார்.

முன்னதாக, இன்று வார்னே கடைசியாக தன் டிவிட்டரில் முன்னாள் ஆஸி.கிரிக்கெட் வீரர் ராட் மார்ஷ்(75) மறைந்ததை அறிந்து ‘ராட் மார்ஷ் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமாக உள்ளது. நம் விளையாட்டின் ஜாம்பவானான அவர் பல இளம் வயதினருக்கு முன்னுதாரணமாக விளங்கியவர். முக்கியமாக கிரிக்கெட்டை மட்டுமல்லாது ஆஸி மற்றும் இங்கிலாந்து வீரர்களிடமும் ஆழமான நேசத்தை வெளிப்படுத்தியவர். அவருக்கு அஞ்சலி’ எனப் பதிவிட்டார்.

எதிர்பாராத விதமாக ஒரே நாளில் ஆஸி. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் காலமானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியதுடன் சிலர் வேதனையுடன் வார்னேவின் பதிவைப் பகிர்ந்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.