நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

முதல் ஓவரிலேயே ‘சம்பவம்’ செய்த ஷாஹீன் அப்ரிடி

தொடக்க வீரர் ஃபின் ஆலனை முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி.

News image
Updated On :9 நவம்பர் 2022, 9:49 am

DIN

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தொடக்க வீரர் ஃபின் ஆலனை முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி.

சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது நியூசிலாந்து அணி.  இரு அணிகளிலும் மாற்றம் எதுவுமில்லை. இந்த டி20 உலகக் கோப்பையில் சிட்னியில் முதலில் பேட்டிங் செய்த 6 அணிகளில் 5 அணிகளுக்கு வெற்றிகள் கிடைத்துள்ளன. இன்று மழை அறிகுறி எதுவும் இல்லாததால் பரபரப்பான ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள். 

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஃபின் ஆலனை முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்கச் செய்தார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி. முதல் பந்தில் பவுண்டரி அடித்தார் ஆலன். அடுத்தப் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்தார். ஆனால் பந்து, பேட்டில் பட்டு பிறகு கால்காப்பில் பட்டதால் டிஆர்எஸ் முறையீட்டின் வழியாகத் தப்பித்தார் ஆலன். ஆனால் அடுத்தப் பந்திலும் எல்பிடபிள்யூ ஆனார் ஆலன். டிஆர்எஸ் முறையீடு இந்த முறை உதவவில்லை. இதனால் முதல் ஓவரிலே ஃபின் ஆலனை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு அருமையான தொடக்கத்தை அளித்துள்ளார் ஷாஹீன் அப்ரிடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.