டி20 தரவரிசையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்!
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் நெ.1 வீரராக நீடிக்கிறார் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ்.


ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் நெ.1 வீரராக நீடிக்கிறார் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் 5 இன்னிங்ஸில் 3 அரை சதங்கள் அடித்த இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். தற்போது வெளியிடப்பட்டுள்ள டி20 தரவரிசையிலும் பேட்டர்களுக்கான பிரிவில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் சூர்யகுமார் யாதவ். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் 239 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 189.68. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், 12-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். அவர் 212 ரன்கள் எடுத்தார்.
பேட்டர்களுக்கான டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ், ரிஸ்வான், பாபர் ஆஸம், கான்வே, மார்க்ரம் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளார்கள்.
பந்துவீச்சாளர்களுக்கான டி20 தரவரிசையில் இலங்கையின் ஹசரங்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் அடில் ரஷித் 3-ம் இடத்துக்கும் சாம் கரண் 5-ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...