கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகளிர் ஆசியக் கோப்பை: இலங்கையை எளிதாக வீழ்த்திய இந்திய அணி!

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில்...

News image

ஜெமிமா (கோப்புப் படம்)

Updated On :1 அக்டோபர் 2022, 11:02 am

DIN

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. 

டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஷெஃபாலி வர்மா வர்மா 10 ரன்களிலும் மந்தனா 6 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் - ஜெமிமா ரோட்ரிகஸ் அபாரமான கூட்டணியை அமைத்தார்கள். இருவரும் 71 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார்கள். ஜெமிமா 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ஹர்மன்ப்ரீத் 33 ரன்களிலும் ஜெமிமா 76 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. இலங்கையின் ஒஷாதி உதேசிகா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்பிறகு பேட்டிங் செய்த இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. இதனால் 18.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை அணி, 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஹேமலதா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக ஜெமிமா தேர்வானார். 

ஆசியக் கோப்பை டி20 போட்டியில் 7 நாடுகள் போட்டியிடுகின்றன. இந்திய அணி அக்டோபர் 3 அன்று மலேசியாவையும் அக்டோபர் 4 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தையும் அக்டோபர் 7 அன்று பாகிஸ்தானையும் அக்டோபர் 8 அன்று வங்கதேசத்தையும் அக்டோபர் 10 அன்று தாய்லாந்தையும் எதிர்கொள்கிறது. அக்டோபர் 13 அன்று அரையிதிச் சுற்றும் அக்டோபர் 15 அன்று இறுதிச்சுற்றும் நடைபெறவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.