தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

3-வது ஒருநாள்: வந்த வேகத்தில் திரும்பும் தெ.ஆ. பேட்டர்கள்!

தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

News image

சிராஜ்

Updated On :11 அக்டோபர் 2022, 10:24 am

DIN

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 73 ரன்களை எடுத்துத் தடுமாறி வருகிறது தென்னாப்பிரிக்க அணி.

ராஞ்சியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமன் ஆனது. 3-வது ஒருநாள் தில்லியில் இன்று நடைபெறுகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் அறிமுகம் ஆகியுள்ளார். தெ.ஆ. அணியில் பவுமா, மஹாராஜ், ரபாடா ஆகியோர் இடம்பெறவில்லை. 

இந்திய அணியினர் சிறப்பாகப் பந்துவீசியதால் ஆரம்பம் முதல் தடுமாறியது தென்னாப்பிரிக்க அணி. 3-வது ஓவரில் வாஷிங்டனின் பந்தில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் டி காக். மலான் 15 ரன்களுக்கும் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 3 ரன்களுக்கும் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்கள். மார்க்ரம், ஷாபாஸ் அஹமது பந்தில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் மில்லரை 7 ரன்களுக்கு போல்ட் செய்தார் வாஷிங்டன் சுந்தர். இதனால் 19 ஓவர்களில் பாதி விக்கெட்டுகளை 66 ரன்களுக்கு இழந்து தவித்தது தென்னாப்பிரிக்க அணி. இதன்பிறகு அண்டிலே பெக்லுக்வாயோ 5 ரன்களில் குல்தீப் பந்தில் போல்ட் ஆனார்.

தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.