இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஆஸி. அணியின் முதல் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இடமில்லை!

ஆஸ்திரேலிய அணியின் முதல் ஆட்டத்தில் பிரபல பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் இடம்பெற வாய்ப்பில்லை என...

News image
Updated On :20 அக்டோபர் 2022, 5:05 am

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் ஆட்டத்தில் பிரபல பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் இடம்பெற வாய்ப்பில்லை என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார்.

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 

மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் பெர்த்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. 

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறியதாவது:

இந்த உலகக் கோப்பையில் அணியில் உள்ள 15 பேரும் பங்களிக்கவுள்ளார்கள். ஆனால் முதல் ஆட்டத்தில் விளையாடும் 11 பேரில் ஸ்டீவ் ஸ்மித்தும் இருப்பார் என நான் நினைக்கவில்லை. ஆனால் அடுத்து வரும் ஆட்டங்களில் அவருடைய பங்களிப்பு அணிக்கு உதவும். டேவிட் வார்னர் முதல் ஆட்டத்தில் விளையாடுவார் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.